BREAKING NEWS

மீண்டும் நடிக்க வந்தார் சுமா ரங்கநாத்

விஜயகாந்த் நடித்த மாநகரகாவல் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் சுமா ரங்கநாத். உன்னைவாழ்த்தி பாடுகிறேன், புதுப்பாட்டு, மேட்டுகுடி உள்பட பல படங்களில் நடித்தவர் தெலுங்கு இந்தி ஆகிய படங்களீலும் நடித்தார்.
2013 ம் ஆண்டு வெளிவந்த ஆரம்பம் படத்தில் நடித்தவர் அதன் பிறகு தமிழில் நடிக்க வில்லை.
ஆறு ஆண்டுகளுக்கு பிறகு அவர் மீண்டும் தமிழில் நடிக்கிறார்.
வெங்கட் தயாரிப்பில், கே.டி.நாயக் இயக்கும் ‘தண்டுபாளையம்‘ படத்தில்,அவர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இப்படத்தின் இசை தட்டு வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
அப்போது பேசுகையில் சுமா ரங்கநாத் கூறியதாவது:-
வீட்டில் புகுந்து கொள்ளையடிப்பதோடு, பெண்களை பலாத்காரம் செய்து கொல்லும் கும்பல் குறித்த அதிரடி திரைப்படம் ‘தண்டுபாளையம்’‘.. இதில், கொள்ளைக்கூட்ட தலைவியாக நடிக்கிறேன். வித்தியாசமான வேடம் என்பதால், உடனே ஒப்புக்கொண்டேன்.
இதே மாதிரி வித்திசாசமான வேடம் வந்தால் தொடர்ந்து படத்தில் நடிப்பேன். இப்[போது எனக்கு தேவை வித்திசாமான வேங்களே‘‘
.இவ்வாறு அவர் கூறினார்.மற்றும் படத்தை வெளியிடும் பாலாஜி, பாடலாசிரியர் சொற்கோ, நடிகர் அபி சரவணன், இயக்குநர் மற்றும் நடிகர் தருண்கோபி ஆகியோரும் பேசினார்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *