BREAKING NEWS

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’

நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ‘‘ஹீரோ‘‘ என்ற படத்தில் நடித்துகொண்டு இருக்கிறார். இப்படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் வழங்கும் சிவகார்த்திகேயன் புரடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்துக்கு ‘‘டாக்டர்’’ என தலைப்பு சூட்டப்பட்டு இருக்கிறது.படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ப்ரியங்கா நடிக்கிறார். இவர் ‘கேங்ஸ்டர்‘‘ என்ற தெலுங்கு படத்தில் நடித்தவர். இப்படத்தின் மூலம் தமிழில் அறீமுகம் ஆகிறார்.
மற்றும் யோகிபாபு,வினய் உள்பட பலர் நடிக்கும் இப்படத்தை ‘கோலமாவு கோகிலா’’ படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் கதை வசனம் எழுதி இயக்குகிறார். அனுரூத் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் நெல்சன் கூறுகையில்‘‘ ஆக்‌ஷன் கலந்த காமெடி படமாக இப்படம் உருவாகிறது‘‘ என தெரிவித்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *