லண்டன் போலீசிடம் சிக்கி தவித்த ஸ்ரேயா

‘சண்டக்காரி’ படத்தில் விமல்-ஸ்ரேயா காதல் ஜோடியாக நடிக்கிறார்கள். “இந்த படத்தில், ஸ்ரேயா ஒரு சாப்ட்வேர் கம்பெனியின் உயர் அதிகாரியாகவும், விமல் என்ஜினீயராகவும் நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. முக்கிய காட்சிகள் லண்டன் விமான நிலையத்தில் படமாக்கப்பட்டன. விமல், ஸ்ரேயா, சத்யன் ஆகிய மூன்று பேர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமானது.

அப்போது பாதுகாப்பு மிகுந்த குடியுரிமை பகுதியை ஸ்ரேயா தாண்டி போனார்.
“எப்படி உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியுரிமை பகுதியை தாண்டி வந்தீர்கள்?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். உடனே விமல் உள்பட படக்குழுவினர் ஓடிவந்து, உரிய ஆவணங்களை காட்டி, படப்பிடிப்புக்காக வந்து இருக்கிறோம் என்று விளக்கிய பின், போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஸ்ரேயாவை விடுவித்தனர்.”

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *