BREAKING NEWS

சுசீந்திரன் இயக்கத்தில் ‘சாம்பியன்’

வெண்ணிலா கபடி குழு படத்தை இயக்கிய சுசீந்திரன் இப்போது கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து ‘‘சாம்பியன்’‘ படத்தை இயக்கி இருக்கிறார்.
களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் கதாநாயகனாக புதுமுகம்
விஷ்வா அறிமுகமாகியுள்ளார். மிருணாளினி, சௌமிகா ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்க, நரேன், மனோஜ், ஸ்டண்ட் சிவா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியீடு சென்னை சத்யம் தியேட்டரில் நேற்றுகாலை நடந்தது.
நிகழ்ச்சியில் அமைச்சர் விஜய பாஸ்கர் கலந்து கொண்டு படத்தின் இசை தட்டை வெளியிட இயக்குனர்கள் பாரதிராஜா, டி ராஜேந்தர் ஆகியோர் பெற்றுக்கொண்டர்.
அமைச்சர் விஜய பாஸ்கர் பேசுகையில்,‘‘ வெளியே மழை, உள்ளே கலை. இந்த கலை எனக்கு விருப்பமானவர்கள் இந்த மேடையில் இருக்கிறார்கள். பாரதிராஜா, டி. ராஜேந்தர் படங்கள் எனக்கு பிடிக்கும். இவர்கள் இருக்கும் மேடையில் நானும் கலந்து கொண்டது பெருமை. சுசீந்தரன் தரமான படங்கள் தரும் கலைஞர் இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.‘‘என்றார். மற்றும் இயக்குனர்கள் பாரதி ராஜா ,டி ராஜேந்தர், நடிகர்கள் ஆர்.கே. சுரேஷ், அப்புகுட்டி ,உதயா இந்திய கால்பந்து விளையாட்டு வீரர் ராமன் , படத்தின் கதாநாயகன் விஷ்வா, நடிகர்கள் மனோஜ், நரேன், கதாநாயகிகள்முருணாளினி,சவுமிகா, ஸ்டண்ட் மாஸ்டர் சிவா, இசையமைப்பாளர் அரோல் கொரோலி தயாரிப்பாளர் ராகவி ஆகியோரும் பேசினார்கள் இயக்குநர் சுசீந்தரன் நன்றி தெரிவித்தார்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *