BREAKING NEWS

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்திருக்கும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு டெல்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று அவர் குடியரசு தலைவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று கோத்தபய ராஜபக்சே அதிபராக பதவியேற்றார்.

இவருக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர் இந்தியாவுக்கு வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனை ஏற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவு நேற்று முன்தினம் இந்தியா வந்தார்.

3 நாள் பயணமாக டெல்லி வந்துள்ள அவருக்கு குடியரசு தலைவர் மாளிகையில் சிறப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவரை வரவேற்று தற்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், வி.ஐ.பிக்களுக்கு அறிமுகபடுத்தினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *