BREAKING NEWS

டிஜிட்டலில் ரஜினியின் ‘பாட்ஷா’

ரஜினிகாந்த் நடித்த ‘‘பாட்ஷா ‘‘படம் கடந்த 1995 ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியானது. படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்க ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன் ஆகியோரும் நடித்து இருந்தனர். தேவா இசையமைத்த இப்படம் மிகப்பெரிய வெற்றியை தழுவியது.ரஜினியின் திரை உலக வாழ்க்கையில் மிக முக்கியமான படமாகவும் அமைந்தது.
‘பாட்ஷா‘ படத்தை திரும்பவும் படமாக எடுக்க பலர் முயற்சி செய்தனர். ஆனால் ரஜினிகாந்த் பாட்ஷா படத்தை திரும்ப எடுத்தால் சரியாக இருக்கது என்றார்.
படம் வெளிவந்து 24 வருடம் ஆகி விட்டபடியால் தற்போது பாட்ஷா படம் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டுள்ளது. ரஜினியின் பிறந்த நாள் டிசம்பர் 12-ந்தேதி என்பதால், டிசம்பர் 11-ந்தேதி அன்று மீண்டும் தமிழகமெங்கும் திரையிடுகிறார்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *