கமல் தயாரிக்கும் படத்தில் ரஜினிகாந்த்?

நடிகர் கமலஹாசனும் ரஜினிகாந்த்தும் 35 ஆண்டு கால நண்பர்கள். நட்பில் ஒருவொருக்கொருவர் விட்டு கொடுக்காதவர்கள்.சினிமாவை கடந்து இருவரும் அரசியலுக்கு வந்த போதிலும் இருவருக்கும் இடையில் இன்னமும் நல்லதொரு நட்பு நிலவி வருகிறது.
ரஜினி, கமல் இருவருமே அரசியலுடன் சினிமாவிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்கள். கமல் இப்போது ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2‘ படத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்து ‘தலைவன் இருக்கிறான்‘ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். அதோடு ‘‘கைதி‘‘ படம் இயக்கிய லோகேஷ் கனகராஜை தனது பட நிறுவனத்துக்காக ஒப்பந்தம் செய்து வைத்து இருக்கிறார்.
ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்‘ படத்தில் நடித்து முடித்து விட்டார். அடுத்து சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். தொடர்ந்து நடிப்பதற்காக ‘சக்சஸ்‘ கொடுத்த இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்.
இதனிடையே சமீபத்தில் ‘கைதி‘ படத்தை பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜை போனில் அழைத்து ரஜினி பாராட்டினார். அப்போது டெல்லி படப்பிடிப்பில் இருந்த லோகேஷ் கனகராஜ் சென்னை திரும்பியதும் ரஜினிகாந்த்தை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இந்த சந்திப்பை தொடர்ந்து ரஜினி – லோகேஷ் கனகராஜ் இணைவதாக செய்திகள் வெளியாயின.
தற்போது அந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டெர்னேஷனல் பட நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *