BREAKING NEWS

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பசலனம் காரணமாக, தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யும்.சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, அடுத்த 2 நாட்களுக்கு குமரிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், தங்கச்சிடம் ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 7 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *