BREAKING NEWS

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு

சீனாவின் ஜின்ஷி மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாகிங், குவாங்ஸி தலைநகரான தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிராந்தியத்தில் காலை 9:18 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. குவாங்ஸி ஜுவாங் பகுதியில் 10 கி.மீ ஆழத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டு சில மணி நேரம் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. பல இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்தன. அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதனால், நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுவிக்கப்படவில்லை. இதனிடையே இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நிலநடுக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சாலைகளில் பிளவு ஏற்பட்டதால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து முடங்கியது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *