தொடங்கியது,‘பொன்னியின் செல்வன்‘ படப்பிடிப்பு

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார்.
இதில் நடிக்க அனைத்து மொழிகளில் இருந்தும் 14 முன்னணி நடிகர்-நடிகைகள் தேர்வாகி உள்ளனர். ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், நந்தினியாக ஐஸ்வர்யாராய் நடிக்கின்றனர்.
மேலும் பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். ஐஸ்வர்யாராய் 2 வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக எடுக்கின்றனர். தாய்லாந்தில் உள்ள காடுகளை படப்பிடிப்பு தளமாக மணிரத்னம் தேர்வு செய்துள்ளார். அங்கு அரண்மனை அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு முடிந்துள்ளது.
இந்த நிலையில், தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் ‘ பொன்னியின் செல்வன்‘ படப்பிடிப்பு தொடங்கியது. கார்த்தி, ஜெயம் ரவி நடித்த காட்சிகளை மணிரத்னம் படமாக்கினார். மற்ற நடிகர்-நடிகைகள் நடிக்கும் காட்சிகள் அடுத்தடுத்த நாட்களில் படமாக்கப்பட உள்ளன. இதற்காக அனைவரும் பாங்காக் புறப்பட்டு செல்கிறார்கள். 40 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கிறது.
இந்நிலையில், குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட கீர்த்தி சுரேஷ், தற்போது இப்படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த்-சிவா கூட்டணியில் உருவாகும் தலைவர் 168 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள கீர்த்தி சுரேஷ், கால்ஷீட் பிரச்சனை காரணமாக ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அமலாபால், பார்த்திபன் ஆகியோரும் இப்படத்தில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *