முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் உறுதிமொழி

அஞ்சலி செலுத்திய பின்னர் முதல்வர், துணை முதல்வர் தலைமையில் அ.தி.மு.க.வினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
அந்த உறுதிமொழியின் விவரம் பின்வருமாறு:-
ஜெயலலிதா தமிழ்நாட்டு அரசியலில் புதிய சரித்திரங்களைப் படைத்த சாதனைச் செம்மல். ஜெயலலிதாவினால் தமிழ்நாடு அடைந்திட்ட வளர்ச்சிகளை, மக்களுக்கு எந்நாளும் எடுத்துக் கூறிட உறுதி ஏற்கிறோம். எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வை ஆயிரம் காலத்துப் பயிராக நிலைபெறச் செய்த ஜெயலலிதா வழியில் கழகப் பணிகளை
தொடர்ந்து ஆற்றிடுவோம். ஜெயலலிதாவின் நிலைத்த புகழுக்குப் பெரும்புகழ் சேர்ப்போம்.
தமிழக மக்களுக்காக அரசு, மேற்கொண்டிருக்கும் மக்கள் நலப் பணிகளை, பட்டி தொட்டி எங்கும் எடுத்துரைப்போம். தமிழக மக்களிடையே அரசுக்கு, மென்மேலும் நல்லாதரவு பெருகிட அயராது பணியாற்றுவோம். ஜெயலலிதா அமைத்துத் தந்த அரசினை, வெற்றிமேல் வெற்றி பெறச் செய்வோம். அ.தி.மு.க.வின் உண்மைத் தொண்டராகவும், நம்பிக்கைக்குரிய விசுவாசியாகவும், தொடர்ந்து உழைத்திடுவோம். விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தலில் ஒற்றுமையாகவும், கடினமாகவும் உழைத்து, மகத்தான வெற்றியைப் பெற்றது போல, உள்ளாட்சித் தேர்தலில், மாபெரும் வெற்றி பெற்று கழகத்தை வெற்றிச் சிகரத்தில் வீற்றிருக்கச் செய்வோம்.
இவ்வாறு அவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *