BREAKING NEWS

“நாராயணசாமியை பார்க்க யாரும் ஆஸ்பத்திரி வர வேண்டாம்”

சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி தற்போது பூரண ஓய்வில் இருக்க வேண்டி உள்ளதால் அவரை காண யாரும் சென்னைக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.புதுவை முதல்அமைச்சர் அலுவலகத்தில் இருந்து ஒரு செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:25.11.2019 அன்று மூட்டுவலி காரணமாக சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட முதல்அமைச்சர் நாராயணசாமிக்கு டாக்டர்கள் பரந்துரையின் பேரில் சிறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.அறுவை சிகிச்சைக்கு பின் தற்போது முதல்அமைச்சர் உடல்நிலை சீராக உள்ளது. இதனையடுத்து முதல்அமைச்சர் இன்று ஆஸ்பத்திரியில் அலுவலக கோப்புகளை பார்வையிட்டு கையொப்பமிட்டார்.

அவருடைய உடல்நிலை சீராக உள்ளதால் இன்னும் ஓரிரு தினங்களில் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பலாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.முதல்அமைச்சர் தற்போது பூரண ஓய்வில் இருக்க வேண்டி உள்ளதாலும், விரைவில் ஆஸ்பத்திரியில் இருந்து புதுவை திரும்ப உள்ளதாலும் அவரை காண யாரும் சென்னைக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.தன்னுடைய நலன் குறித்து அன்புடன் விசாரித்த அனைவருக்கும் முதல்அமைச்சர் நாராயணசாமி தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொண்டார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *