BREAKING NEWS

நித்யா மேனன் மனம் திறந்த பேச்சு

இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்று வருகிறது..
இந்த விழாவில் திரைத்துறையை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி தினசரி நடந்து வருகிறது. இந்த கலந்துரையாடலில் நடிகை நித்யா மேனன் கலந்துகொண்டார்.
அப்போது அவர் தனது சினிமா வாழ்க்கை பற்றி மனம் திறந்து பேசினார் அவர் கூறிய்தாவது;-.
“காடுகளில் அலைந்து திரிந்து, மிருகங்களை பற்றி படமெடுத்துக்கொண்டிருக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. ஆனால் சந்தர்ப்ப சூழலால் நடிகையாகிவிட்டேன். என்னுடைய கேரக்டர் சினிமாவுக்கு சுத்தமாக செட்டாகாது
ஆனால் சமீபகாலமாக நான் சினிமாவை மிகவும் நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்..
எனது சினிமா வாழ்க்கை பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் போன்றது. காதல் திருமணம் போன்று, எடுத்த உடனே கணவன் – மனைவிக்குள் அந்நோன்யம் பிறந்துவிடாது. ‘அரேஞ்சுடு மேரேஜ்’ஜில் நாளாக ஆக தான் ஆழமான காதல் உருவாகும். அதுபோல் தான் எனக்கு சினிமா மீது இப்போது காதல் வந்துள்ளது.
இவ்வாறு நித்யா மேனன் கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *