BREAKING NEWS

மும்பையில் என்சிபி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது

மும்பையில் சரத் பவார் தலைமையில் என்சிபி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் 42 பேர் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.மராட்டிய அரசியலில் திடீர் திருப்பமாக முதல் மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக்கொண்டார்.

துணை முதல் மந்திரியாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பொறுப்பேற்றுக்கொண்டார். அஜித்பவாரின் முடிவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார். இதனால், மராட்டிய அரசியலில் அடுத்தடுத்த திருப்பம் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை அக்கட்சியின் தலைவர் சரத்பவார் கூட்டினார். இந்தக் கூட்டத்தில், அக்கட்சியின் 54 எம்.எல்.ஏக்களில் 42 பேர் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்.சி.பி கட்சி அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 9 பேர் டெல்லிக்கு சென்று கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *