BREAKING NEWS

6 அதிகாரிகளுக்கு முன்ஜாமின் வழங்கியது, டெல்லி சிறப்பு நீதிமன்றம்

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் 6 அதிகாரிகளுக்கு முன்ஜாமின் வழங்கி டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்னிய முதலீட்டு வளர்ச்சி வாரியத்தில் உறுப்பினர்களாக இருந்த 6 பேருக்கும் முன்ஜாமின் வழங்கி டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

6 பேரின் முன்ஜாமின் மனுவுக்கு பதிலளிக்க சிபிஐ அதிகாரிகளுக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த‌போது அவருக்கு கீழ் 6 அதிகாரிகளும் பணியாற்றி இருந்தனர். 6 அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் 6 அதிகாரிகள் பெயரும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை மீதான விசாரணை டிசம்பர் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *