BREAKING NEWS

நாகர்கோவிலில் ‘மூக்குத்தி அம்மன்’

நகைசுவை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’
இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் உள்ள பகபதி அம்மன் கோவிலில் சம்பிரதாயமான பூஜைக்குப் பிறகு நாகர்கோவிலில் தொடங்கியது. முதல் கட்டப் பிடிப்பில் நயன்தாரா விரைவில் இணைய இருக்கிறார்.
நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி, ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் கதை, திரைக்கதை. வசனங்களை எழுதியிருப்பதுடன் என்.ஜே.சரவணனுடன் இணைந்து படத்தையும் இயக்குகிறார். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைக்க தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய சண்டைகாட்சிகளை, ஸ்டண்ட் சில்வா கவனிக்கிறார்
‘எல்.கே.ஜி.’, ‘கோமாளி’, மற்றும் ‘பப்பி’ ஆகிய படங்களை தயாரித்த டாக்டர் ஐசரி கே.கணேசின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் இப்படத்தை தயாரிக்கிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *