BREAKING NEWS

ஔவை நடராசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

தஞ்சை தமிழ்பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ஔவை நடராசனுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதை, தொழில் ்அதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் வழங்கினார். திருவையாறு அரசர் கல்லூரிப் பேராசிரியர் எச். வேங்கடராமன் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை “ரஷியன் கலாச்சாரம் மற்றும் அறிவியல் பண்பாட்டு மைய” அரங்கில், தஞ்சை தமிழ்ப் பல்கலைகழக மேனாள் துணைவேந்தர் ஔவை நடராசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்ச்்சி நடந்தது. முனைவர் ஒளவை நடராசனுக்கு, தொழில் அதிபர் நல்லி குப்புசாமி செட்டியார், வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து முனைவர் தி.ராசகோபாலன், மு.வீரையன், முனைவர் இ.கோமதிநாயகம் ஆகியோரும் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றனர்.ஒளவை நடராசன் விழாவில் பேசியதாவது:- தமிழகத்தின் புகழும் பெருமையும் வாய்ந்த தமிழ்க் கல்லூரியாகத் திகழ்ந்த திருவையாற்று அரசர் கல்லூரியில் ஆர்வத்தோடு பங்கு கொண்ட மாணவர்கள் பலர் பின்னாளில் பேராசிரியர்களாகவும் அறிஞர்களாகவும் ஒளி வீசுகின்றனர்.தனித் தமிழ் பயிலுகிற வாய்ப்பு என்பது, இப்போது அறவே இல்லை என்றாலும், தனித்தமிழ் புலமையினுடைய கல்விச் செறிவு என்பது மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.

அந்த வகையில் பயின்ற பேராசிரியர் இராசேந்திரன், தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகவும், பேராசிரியர் இராசகோபாலன் கிருத்துவத் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவராகவும், புலவர் வீரைய்யன் புகழ் வாய்ந்த எழுத்தாளராகவும் ஓய்வு பெற்ற பிறகு புலவர் விஜயலட்சுமி தந்தையாரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்துவது பாராட்டுதற்குரியது.புலவர்களைப் போற்றுவது என்பது, இளைஞர்களின் எதிர்காலத்துக்கு ஊக்கம் ஊட்டவதாகும்.

இலக்கண இலக்கிய புலமை செழித்து வளர்வதற்கு பேருதவியாக இருக்கும். தமிழார்வர் குறைந்து வரும் இந்த நாளில், புகழப்படும் பேராசிரியர் வேங்கடராமன் நூற்றாண்டு விழா நினைக்கத்தக்கதாகும். இவ்வாறு ஔவை நடராசன் பேசினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *