BREAKING NEWS

தமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமானது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் செயல்பாட்டை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். புதிய மாவட்டம் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் என இரு கோட்டங்களை உள்ளடக்கியது. கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, கல்வராயன்மலை ஆகிய 6 வட்டங்கள் உள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம் ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்டது.

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக கிரண்குராலா நியமிக்கப்பட்டுள்ளார். அதுபோல் போலீஸ் சூப்பிரண்டாக ஜெயச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டார். விழாவுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தலைமை செயலாளர் சண்முகம் வரவேற்று பேசினார்.

மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். வடக்கு மண்டல ஐ.ஜி., நாகராஜ் மேற்பார்வையில் டி.ஐ.ஜி., சந்தோஷ் குமார் தலைமையில் எஸ்.பி.,க்கள் ஜெயச்சந்திரன், அபினவ், மயில்வாகனன், அரவிந்தன், 3 ஏ.டி.எஸ்.பி.,க்கள், 15 டி.எஸ்.பி.,க்கள் உட்பட மொத்தம் ஆயிரத்து 600 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *