காளிதாஸ் – விமர்சனம்

அடுக்கு மாடி குடியிருப்பு. அதன் மாடியில் இருந்து ஒரு பெண் கிழே விழுந்து மரணம் அடைகிறாள். துப்பு துலக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் வருகிறார். அவர் விசாரணை நடத்தி கொண்டு இருக்கும் போதே மறுநாளும் இன்னொரு பெண்ணும் மாடியில் இருந்து கிழே விழுந்து சாகிறாள்.

விபரீதமாக நடக்கும் இந்த மர்மங்கள் நீடிக்க இதில் துப்பு துலக்க உயர் போலீஸ் அதிகாரி ஜார்ஜ்ஜும் அனுப்படுகிறார். அவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிதாசுடன் சேர்ந்து தீவிர விசாரணை நடத்த மீண்டும் அதே நிலை. மேலும் ஒரு பெண் மாடியில் இருந்து விழுந்து சாக கொலையா? தற்கொலையா? என புலப்படாமல் போலீஸ் அதிகாரிகள் தலையை பிய்த்துக் கொள்கிறார்கள். இறுதியில் ஒரு பெண் தான் கொலையாளி என துப்பு கிடைக்க அவளை நோக்கி ஓட.. அந்தோ../ அவளும் கொலை செய்யப்படுகிறாள்.

இறுதியில் கொலையாளி யார் என கண்டு பிடிப்பதே கதை.சும்மா பர பரன்னு போகிறது. படம். அந்த அளவுக்கு கதையில் திருப்பங்களுக்கு மேல் திருப்பத்தை கொடுத்து ரசிகர்களை கடைசிவரை சீட்டின் நுனிக்கே கொண்டு வந்து இருக்கிறார் , டைரக்டர் ஸ்ரீ செந்தில்.
போலீஸ் அதிகாரியை பற்றிய கதை. ஆனால்‘‘ஆ ஊ” என கத்தும் கத்தல் இல்லை. மீசையை முறுக்கி கொண்டு ஆவேசமாக போடும் சண்டை காட்சிகள் இல்லை. பதிலாக வீட்டுக்கு பயந்து பம்மும் போலீஸ் அதிகாரியை காணமுடிகிறது. போலீஸ் அதிகாரி வேடத்தில் பரத் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.

ஒருபக்கம் கடமை. இன்னொரு பக்கம் கடமை காரணமாக மனைவியை சரிவர கவனிக்க முடியாத குற்ற உணர்வில் தவிக்கும் தவிப்பு.. இரண்டையும் அருமையாக ‘பேலன்ஸ்‘செய்து இருக்கிறார்.பரத். இந்த படம் அவருக்கு இன்னொரு திருப்புமுனை.
அவருடைய மனைவியாக புதுமுகம் அன் ஷீத்தல், சூப்பர் நடிப்பு.. கணவனிடம் எரிந்து விழுவது…விரகதாபத்தில் ஏங்குவது…நெருக்கமான காட்சிகளில் ஒன்றிப் போய் நடித்திருப்பது என பன்முகம் காட்டி நடித்திருக்கிறார். ‘ தானா சேர்ந்த கூட்டம் ‘படத்தில் நடித்திருந்த சுரேஷ் மேனன், இதில் அஸிஸ்டெண்ட் கமிஷனராக‘ ஜென்டில்மேன்‘ கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார்..

பெண்களிடம் சிரித்து பேசியே கவர்ந்திழுக்கும் வேடத்தில் ஆதவ் . கண்ணதாசனின் பேரனான இவரின் நடிப்பில் உற்சாகம் அதிகம்.
பரத் கூடவே போலீஸ் ஏட்டாக வரும் தங்கதுரை. கவனிக்க வைக்கிறார். ஆங்காங்கே அவர் அடிக்கும் ஜோக் நல்ல கலகலப்பு.

காதுக்கு தனி சுகம் கொடுத்து இருக்கிறது விஷால் சந்திர சேகரின் இசை. அதுவும் பாரதியின் பாடலை கணீர் என கேட்கையில் சொக்குது மனசு. கொலையாளி இவராயிருக்குமோ, அவராயிருக்குமோ என்று பல சந்தேகங்களை கிளப்பிவிட்டு கடைசியில் போலீஸ் அதிகாரி பரத் மீதும் சுரேஷ் மேனன் மீதுமே சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பது டைரக்டரின் புத்திசாலிதனம்..

படம் போவதே தெரியவில்லை.

காளிதாஸ்

செம திரில்லான படம்
2 thoughts on “காளிதாஸ் – விமர்சனம்

  1. kiet giang

    hello!,I like your writing very so much! share we be in contact more approximately your
    article on AOL? I require a specialist on this house to resolve my problem.
    May be that’s you! Taking a look ahead to look you.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *