ஜடா – விமர்சனம்

கால்பந்தாட்ட போட்டி பாதி. பேய்களின் ஆட்டம் மீதி. இது தான் ஜடா.
ஜடா ஒரு கால்பந்து வீரர்.‘ரூல்ஸ் இல்லாமல் ஆடும் ஒரு கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு ஆட உன்னால் முடியுமா? ‘’என அவரிடம் சவால் விடுகிறான்,அடாவடிதனம் புரியும் தீனா. அதை ஏற்று தனது வீரர்களுடன் களத்தில் இறங்குகிறான் ஜடா. இறுதி போட்டி பிரபல கால்பந்து ‘கோட்ச்‘சான சேதுவின் கிராமத்தில் நடத்த தீர்மானம் ஆகிறது. அந்த கிராமத்துக்கு செல்லும் வீரர்களை அங்குள்ள ஒரு பாழடைந்த வீட்டில் இருக்கும் பேய் நடுநடுங்க வைக்கிறது. அது ஏன்? என்பதற்கான விடையே மீதி படம்.
கால்பந்து வீரர் ஜடவாக கதிர். கொடுத்த கேரட்டரை கச்சிதமாக செய்து இருக்கிறார். போட்டியில் எதிரிகளுடம் மோதும் ஒவ்வொரு காட்சியும் உற்சாகம் பிறக்கிறது. அவருக்கு ஜோடியாக ரோஷினி.. வந்து போவதோடு சரி.ஆனாலும் அழகு.
நாயகனுடன் படம் முழுக்க வரும் இன்னொரு வீரராக யோகிபாபு. மைதானத்தின் மத்தியில் இருந்து ‘கோல்‘ அடித்து ஆச்சரியப்படுத்துவது அசத்தல்.
நல்லதொரு ‘கோட்ச்‘சாக கிஷோர். பணத்துக்கு வளைந்து கொடுக்காமல் நேர்மையுடன் பணியாற்றும் கம்பீரம் – மிடுக்கு..
வில்லனாக பிரபல ஓவியர் ஏ.பி. ஸ்ரீதர் ; வில்லத்தன நடிப்பை முகத்திலேயே காட்டியிருப்பது சிறப்பு.
ஏ.ஆர். சூர்யாவின் காமிரா கால்பந்து மைதானத்தை கச்சிதமாக படம் பிடித்து இருக்கிறது. இசை சாம் சி.எஸ்.
இயக்கி இருப்பவர் குமரன். ஒன்று கால்பந்து போட்டி பற்றிய படமாக எடுத்து இருக்கவேண்டும். இல்லையென்றால் பேய் படமாக எடுத்திருக்க வேண்டும். முதல் பாதி முழுக்க கால்பந்து போட்டியை எடுத்தவர், இரண்டாவது பாதியில் படத்தை கிராமத்துக்கு கொண்டுசென்று பேய் படமாக காட்ட முயன்று இருக்கிறார். ஆக எதுவும் முழுதாக இல்லை.
அதிலும் நேஷனல் லெவல் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் எவ்வளவு கம்பீரமாக இருக்கும்? படத்தில் கூட்டமே இல்லாத இறுதிப்போட்டியை காணும் போது கஷ்டமாக இருக்கிறது.

ஆனாலும் ஜடா –ரசிக்க தகுந்தவனே,..
2 thoughts on “ஜடா – விமர்சனம்

  1. kiet giang

    I’ve read some just right stuff here. Certainly worth bookmarking for revisiting.
    I surprise how a lot effort you put to create the sort of great informative website.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *