BREAKING NEWS

“உள்ளாட்சித் தேர்தலை இருகட்டமாக நடத்துவது வேடிக்கையாக உள்ளது”

உள்ளாட்சித் தேர்தலை இரு நடத்துவது வேடிக்கையாக உள்ளது என்றும், உச்சநீதிமன்றத்தில் தேர்தலை முறையாக நடத்த தி.மு.க. முயற்சிக்கிறது என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கடலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக சுமார் 8 ஆயிரம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

மேலும், 10 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியது. இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கடலூர் பகுதியில் நேரில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இதையடுத்து, அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-தேர்தலை நிறுத்த செல்லவில்லைதோல்வி பயம் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக அ.தி.மு.க. அரசு தேர்தலை நடத்தமால் தள்ளிப் போட்டு வந்தது.

உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தேர்தலை நடத்த வேண்டும் என அறிவுறுத்திய காரணத்தால் வேறு வழியின்றி திட்டமிட்டு, யாராவது நீதிமன்றத்திற்கு சென்று தடை உத்தரவு பெற வேண்டும், நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கிடும் என்ற நம்பிக்கையில் அ.தி.மு.க.,வும் – அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துள்ள மாநிலத் தேர்தல் ஆணையமும் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு இந்தப் பணியை நிறைவேற்ற முன் வந்திருக்கிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்த வேண்டும், மறுவரையறை முறையாக செய்யப்படவில்லை, பட்டியலின – பழங்குடியின மற்றும் பெண்களுக்கு ஒதுக்க வேண்டிய மறுவரையறை முழுமையாக நடைபெறவில்லை, அவற்றை எல்லாம் முறைப்படுத்த வேண்டும் என்று கோரித்தான் தி.மு.க. நீதிமன்றத்திற்கு சென்றதே தவிர, தேர்தலை நிறுத்த வேண்டும் என்று செல்லவில்லை.

நீதிமன்றம் சென்றது ஏன்?ஆனால், வேண்டுமென்றே முதலமைச்சர் முதல் – கடைநிலை அமைச்சர் வரை, தி.மு.க.,தான் தேர்தலை நிறுத்த முயற்சிப்பதாக தொடர்ந்து பேசி வருகிறார்கள். நாங்கள் பொய் சொல்வது போல தொடர்ந்து ஒரு நாடகத்தை நடத்துகிறார்கள். புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அதனுடைய வரையறை எந்த நிலையில் உள்ளது என்ற விளக்கத்தை தொடர்ந்து கேட்டு வருகிறோம். அதற்கும் இதுவரை எந்த பதிலும் இல்லை. அரசு தரப்பில் இருந்தும், தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்தும் இதுவரை பதில் வரவில்லை. எங்கள் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மூத்த வழக்கறிஞர்கள் பலமுறை தேர்தல் ஆணையத்திடம் சென்று மனுக்களைத் தந்துள்ளார்கள்.

ஆனால், அதற்கான முறையான விளக்கங்கள் வரவில்லை என்பதால்தான் நீதிமன்றத்தை நாடினோம்.வேடிக்கைதமிழகத்தை பொறுத்தவரை நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சித் தேர்தல்கள் எப்போதும் ஒரே கட்டமாகத்தான் நடைபெற்று வந்துள்ளது. ஆனால், தற்போது ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்திவிட்டு, அதற்கு பிறகு மற்ற இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது வேடிக்கையாக உள்ளது.

தேர்தல் ஆணையத்தில் இருப்பவர், ‘தேர்தல் ஆணையர் பழனிசாமியா அல்லது எடப்பாடி பழனிசாமியா? என்ற சந்தேகம் வந்துள்ளது.தொடர் முயற்சி கேள்வி: டிசம்பர் 6 அன்று வேட்புமனுத் தாக்கல் என்று அறிவித்துள்ளார்கள். கூட்டணி கட்சிகளுடன் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடைபெறுமா?பதில்: எங்கள் மூத்த வழக்கறிஞர்கள், சட்ட வல்லுநர்களுடன் இன்று மாலை அல்லது நாளை பேசி எப்படி அணுகுவது என முடிவு எடுப்போம். உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.

வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்துவதற்கு தி.மு.க. உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *