இரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு – விமர்சனம்

தலைப்பிலேயே கதை இருக்கிறது. இரண்டாம் உலக போரின் போது கடலில் வீசப்பட்ட குண்டுகளில் ஒன்று தமிழக கரையில் ஒதுங்குகிறது. எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் ஆபத்து கொண்ட அந்த குண்டுவை போலீஸ் கைப்பற்றி வைத்து இருக்க அது திடீரென காணாமல் போகிறது. அந்த குண்டு பழைய இரும்பு என்ற அடையாளத்துடன் ‘‘காயலான் கடை‘‘க்கு வர – விவரம் அறியாத காயலான் கடை தொழிலாளர்களால் அந்த குண்டு படும் பாடும் அதை தேடும் ஒரு கூட்டத்தை பற்றிய படம் இது.
அதற்குள் கடையின் லாரி டிரைவருக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலையும் எதிர்ப்பையும் சொருகி கச்சிதமாக கதையை நகர்த்தி இருக்கிறார், இயக்குனர் அதியன் ஆதிரை.
லாரி டிரைவராக தினேஷ். பேச்சும் நடையும் நிஜமான லாரி டிரைவரை நேரில் பார்த்த பரவசம்.. உழைப்பை உறிஞ்சும் கடை முதலாளி மாரிமுத்துவிடம் குடிபோதையில் எகிறி நின்னு மல்லு கட்டும் இடம் பிரமாதம்.
அவரது காதலியாக ஆனந்தி. காதலுக்காக பெற்றோரை எதிர்த்து நிற்கும் ஒவ்வொரு இடமும் உணர்ச்சிகரம்.
படத்தில் மறக்க முடியாத ஒரு கேரக்டர் என்றால் அது முனிஷ் காந்த் தான். காயிலான் கடையில் வேலைபார்க்கும் வேலைக்காரன் ‘‘பஞ்சர்‘‘ஆக வந்து சிரிப்பில் வயிற்றை பஞ்சராக்குகிறார்.
கடை முதலாளி மாரிமுத்து – நடிப்பில் மணியான முத்து.குண்டை தேடி அலையும் ‘தோழராக‘ ரித்விகாவும், குண்டு இடை தரகராக ஜான் விஜய்யும் நடித்துள்ளனர்.
‘‘மாவளியே..‘‘பாடலும் அதை காட்சி படுத்தி இருக்கும் விதமும் கண்களுக்குள் நிற்கிறது.
படத்தில் ஆள் ஆளுக்கு குண்டை தேடுகிறார்கள். அது ஏன் என்பதற்கான காரணத்தை தெளிவாக சொல்லாதது நெருடல். அதே மாதி குண்டின் அபாயத்தை இன்னும் பதைதைக்க சொல்லி இருந்தால் பரபரப்பு கூடி இருக்கும்.
மக்களின் உயிரோடு விளையாடும் குண்டுகள் நாட்டுக்கு தேவை இல்லை என்ற கருத்தை சொன்னதற்காக இயக்குனருக்கு ஒரு ஷொடுக்கு
பார்க்க தகுந்த ‘குண்டு‘
5 thoughts on “இரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு – விமர்சனம்

  1. Arlie

    Hi there! Do you use Twitter? I’d like to follow you if that would be
    ok. I’m absolutely enjoying your blog and look forward to new posts.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *