BREAKING NEWS

மனிதர்களை தாக்கும் ஒற்றை யானையை பிடிக்க கோரிக்கை

கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளில், கடந்த இரண்டு மாதங்களில், மூன்று உயிர்களை பறித்த ஒற்றை யானையை காட்டு பிடித்து முகாமில் பாதுகாக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளான பாச்சலூரு அருகே உள்ள பெரியூர், மன்றவயல், பள்ளத்து கால்வாய் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற தோட்டங்களில், கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக யானைக்கூட்டங்கள் தொடர்ந்து முகாமிட்டுள்ளன.

இதில் ஆண் ஒற்றை யானை ஒன்று, மிகவும் மூர்க்கமாக உலவி வருகிறது. விவசாய நிலங்களுக்குள் புகுந்து வாழை, காப்பி, நெல் பயிர்களையும்சேதப்படுத்தியது.

இதுவரை மூன்று மனித உயிர்களையும் பறித்துள்ளது. இதனால். எந்த வேலைக்கும் போகமுடியாமல் கிராம மக்கள் அச்சமடைந்து பீதியில் உள்ளனர். கிராம மக்கள் மற்றும் விவசாய சங்கங்கள் இணைந்து, வனத்துறை தலைமைச்செயலருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

அதில், சமீபத்தில் அரிசி ராஜா என்ற யானையை பிடித்துபோல், உயிர்கொல்லியான ஒற்றை யானையையும் வனத்துறையினர் பிடித்து முகாமிற்கு அனுப்பி பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். படம்கொடைக்கானல் அருகே மலைப்பகுதிகளில் சுற்றித்திரியும் ஒற்றை யானை.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *