BREAKING NEWS

2021-ம் ஆண்டு முதல் ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வை தமிழில் எழுதலாம்

2021-ம் ஆண்டு முதல் ஐஐடி நுழைவுத் தேர்வை தமிழில் எழுதலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜேஇஇ முதன்மை தேர்வு 2021-ம் ஆண்டு முதல் தமிழ், தெலுங்கு, உருது உள்ளிட்ட 11 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஜேஇஇ என்ற பெயரில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய முகமை ஒவ்வொரு ஆண்டும் இருமுறை நடத்தி வருகிறது. ஆங்கிலம், இந்தி மற்றும் குஜராத்தி மொழிகளில் மட்டுமே இதுவரை நடத்தப்பட்டு வருகிறது.

2020 ஜனவரி மற்றும் ஏப்ரலில் நடத்தப்பட உள்ள தேர்வுக்கான வினாத் தாள், அட்டவணை உள்ளிட்டவற்றை முன்கூட்டியே தயாரித்துவிட்டதால் உடனடியாக மற்ற மாநில மொழிகளில் தேர்வு நடத்த இயலாது என்றும் 2021-ம் ஆண்டு முதல் 11 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்றும் மனித வள அமைச்சகம் கூறியுள்ளது. இதன் மூலம் அவரவர் தாய் மொழியிலேயே ஜேஇஇ முதன்மை தேர்வு எழுதலாம் என்று மத்திய மனிதவள அமைச்சகம் கூறியுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *