BREAKING NEWS

கர்நாடக முன்னாள் முதல்வர்கள் குமாரசாமி, சித்தராமையா மீது தேசத் துரோக வழக்குப்பதிவு

கர்நாடக முன்னாள் முதல்வர்கள் குமாரசாமி, சித்தராமையா மீது தேசத் துரோக வழக்குப்பதிவுஐ.டி.ரெய்டுக்கு எதிராக போராட்டம் நடத்தியபெங்களூரு, நவ.30- கர்நாடக முன்னாள் முதல்வர்கள் குமாரசாமி, சித்தராமையா ஆகியோர் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் பரமேஸ்வரா, டி.கே.சிவக்குமார், முன்னாள் காவல் ஆணையர் சுனில்குமார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 27ல் வருமான வரித்துறை சோதனையின் போது, அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக புகார் கூறப்படுகிறது. ஐ.டி.ரெய்டுக்கு எதிரான போராட்டத்தை காவல்துறை தடுத்து நிறுத்தவில்லை எனவும் சமூக ஆர்வலர் புகார் மனுவில் கூறியுள்ளார். புகாரின் பேரில் தேசத் துரோகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கர்நாடக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் வருமான வரி சோதனைமக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மார்ச் 27-ம் தேதி காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.

இதை கண்டித்து, அப்போதைய முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் வருமான வரித் துறை அலுவலகம் முன் மார்ச் 28-ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சமூக ஆர்வலர் நீதிமன்றத்தில் புகார் மனு இதுதொடர்பாக தும்கூரு மாவட்டம், குப்பி பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மல்லிகார்ஜுன ஆலேகௌடா பெங்களூரு மாநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ‘மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, அப்போதைய முதல்வர் குமாரசாமி ஊடகங்களுக்குப் பேட்டி அளித்திருந்தார். மஜத தலைவர்கள் சிலரின் மீது வருமான வரித் துறை சோதனை நடத்தவுள்ளதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாகக் கூறியிருந்தார். அதன்படியே, மார்ச் 27-ம் தேதி காங்கிரஸ், மஜத தலைவர்களின் வீடுகளில் வருமானவரித் துறை சோதனை நடத்தியது. இதைக் கண்டித்து மார்ச் 28-ம் தேதி காங்கிரஸ், மஜத தலைவர்கள் வருமான வரித் துறை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தேர்தல் நடத்தை விதிமீறலாகும். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ், மஜத தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய தலைவர்கள் வருமான வரித் துறையை பாஜகவின் முகவர் என்று குற்றம் சாட்டினர். இதன் மூலம் வருமான வரித் துறை அதிகாரிகளை கடமையைச் செய்யவிடாமல் தடுத்தனர். போராட்டத்தின் போது குழுமியிருந்த போலீஸாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, போராட்டத்தையும் நிறுத்தவில்லை’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.முன்னாள் முதல்வர்கள் குமாரசாமி, சித்தராமையா மீது தேசத் துரோக வழக்குஇதை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

அதன்படி, கமர்ஷியல் தெரு காவல் நிலையத்தில் முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி, முன்னாள் துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் அமைச்சர்கள் டி.கே.சிவக்குமார், சா.ரா.மகேஷ், தம்மண்ணா, முன்னாள் எம்பி சிவராமே கௌடா, முன்னாள் எம்எல்ஏ முனிரத்னா, முன்னாள் காவல் ஆணையர் சுனில்குமார் உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 217, 176, 121, 177, 506, 153ஏ, 414, 149, 505(2), 124ஏ, 353, 409, 350, 417, 120ஏ, 416, 171சி, 119, 141, 499 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு டிச.5-ம் தேதி இடைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *