BREAKING NEWS

வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம்

வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச தொகையை இருப்பு வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதித்த வகையில் பொதுத் துறை வங்கிகள் கடந்த நிதியாண்டில் 1,996.46 கோடி ரூபாயை கூடுதல் வருவாயாக பெற்றுள்ளன. வங்கிகளில் குறைந்தபட்ச தொகையை இருப்புத் வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அந்த கணக்கில் மாதந்தோறும் மினிமம் பேலன்ஸ் (குறைந்தபட்ச இருப்பு தொகை) பராமரிக்க வேண்டும்.

ஒவ்வொரு வங்கிகளும் ஒவ்வொரு விதமான அபராத கட்டணத்தை வசூலிக்கின்றன. இந்நிலையில் குறைந்தபட்ச தொகையை இருப்பு வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதித்த வகையில், பொதுத் துறை வங்கிகள் கடந்த நிதியாண்டில் 1,996.46 கோடி ரூபாயை கூடுதல் வருவாயாக பெற்றுள்ளன. மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் இத்தகவலை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அடிப்படை சேமிப்பு கணக்கு, ஜன் தன் கணக்குகளில் இவ்வகையான அபராதம் வசூலிக்கப்படுவதில்லை என்றும் அமைச்சர் விளக்கம் அளித்தார். மார்ச் இறுதி நிலவரப்படி, நம் நாட்டில் மொத்தம் 57.3 கோடி அடிப்படை சேமிப்பு வங்கி கணக்குகள் செயல்பாட்டில் உள்ளன. இதில் 35.27 கோடி ஜன் தன் கணக்குகளும் அடங்கும் என தெரிவித்தார். இந்த கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படுவதில்லை என கூறினார்.

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு பராமரிக்கவில்லை என்றால் மட்டுமே அபராதம் விதிக்கப்படுகிறது என தெரிவித்தார். 2017-18ம் நிதியாண்டில் 18 பொதுத்துறை வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் மினிமம் பேலன்ஸ் இல்லை என மொத்தம் ரூ.3,368 கோடி அபராதம் விதித்து இருந்தன என கூறினார். இதுபோல் 2016-17ம் நிதியாண்டைக் காட்டிலும் சுமார் ரூ.790 கோடி அதிகமாகும் என கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *