BREAKING NEWS

நடிகரிடம் ‘நறுக்’ கேள்வி கேட்ட ரசிகர்

நகைச்சுவை நடிகர் ஆர்ஜே பாலாஜி மிகச்சில படங்களில் நடித்தாலும் அவரது படங்களில் அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள் குறித்த கிண்டல்களும் கூடவே இரட்டை அர்த்த வசனங்களும் தவறாமல் இடம்பெறும். இதற்கிடையில் அவ்வப்போது சமூக நோக்கிலான சில கருத்துக்களையும் ஆர்.ஜே. பாலாஜி சொல்வார்.
இந்த நிலையில் ட்விட்டரில் ஆர்ஜே பாலாஜியை பின்தொடரும் ரசிகர் நவின் மணிவண்னன் என்பவர், படத்தில் இரட்டை அர்த்தமுள்ள வசனம் பேசுகிறீர்கள்.. நிஜ வாழ்க்கையில் தமிழகத்தைக் காக்க வந்த சமூக போராளி போல் பேசுகிறீர்கள்.. இதற்கு பெயர் என்ன..?” என்று கேட்டுள்ளார்.. இதனால் கோபமான ஆர்ஜே பாலாஜி, அதற்கு பதில் கூற விரும்பாமல் உடனடியாக அவரை பிளாக் செய்துள்ளார்
இதுபற்றிய தகவலை வெளியிட்டுள்ள அந்த நபர் ‘‘நீங்களும் ஆர்ஜே பாலாஜியிடம் இதுபோன்று கேட்டுப் பாருங்களேன் ‘‘என்று கூறியுள்ளார்..




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *