தமிழில் பூ, மரியான் உள்பட பல படங்களில் நடித்து இருப்பவர் நடிகை பார்வதி. மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபோது பார்வதி கூறியதாவது:-
“சினிமாவில் பெண் வெறுப்புகளை காட்சிப்படுத்துகின்றனர்.. பெண்ணை உயர்வாக சித்தரிப்பதற்கும் வெறுப்பு ஏற்படும்படி காட்டுவதற்கும் வித்தியாசம் உள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறை காட்சிகளை பார்த்து ரசிகர்கள் கைதட்டுகிறார்கள் என்பதற்காக அதற்கு முக்கியத்துவம் கொடுத்து படம் எடுக்கின்றனர். அதற்கு பதிலாக ரசிகர்களை யோசிக்க வைப்பதுபோல் காட்சிகள் வைக்கலாம்
. நான் 13-வது வயதில் இதுபோன்ற படங்களை பார்த்து நெளிந்து இருக்கிறேன். ஆனால் மற்றவர்கள் அந்த காட்சிகளை ரசித்தனர். பிறகு அதுபோன்ற சம்பவம் எனது சொந்த வாழ்க்கையிலும் நடந்தது. நானும் பாதிக்கப்பட்டேன்.
பெண்களுக்கு எதிரான திரைப்படங்கள் இளம் பெண்கள் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். வணிக படங்கள் எடுக்கலாம். ஆனால் அவை பெண்களை இழிவுபடுத்துவதுபோல் இருக்க கூடாது.
இவ்வாறு பார்வதி கூறினார்.

Previous Postகொள்முதல் செய்யும் பாலுக்கு ஜனவரி முதல் ரசாயன பரிசோதனை
Next Postதிருமணம் ஆகாமலேயே கர்ப்பம் ஆன அஜித் பட நடிகை