BREAKING NEWS

அஜித் படத்தில் நடிக்க மறுத்தேனா?

நடிகர் அஜிதகுமார் கதாநாயகனாக நடிக்க ‘வலிமை‘‘ என்ற படம் தயாராகி வருகிறது. எச்.வினோத் இயக்குகிறார். இந்தப் படத்தின் படபிடிப்பு விரைவில் துவங்க இருக்கும் நிலையில், நடிகர்-நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்க நடிகர் அரவிந்த்சாமியை கேட்டதாகவும், ஆனால் அவர் அப்படத்தில் நடிக்க அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதனை அரவிந்த்சாமி இப்போது மறுத்துள்ளார்.
இதுபற்றி அரவிந்த்சாமி கூறுகையில்,‘‘ வலிமை படத்தில் நடிக்கச் சொல்லி, எனக்கு யாரிடம் இருந்தும் அழைப்பு வரவில்லை. அது தொடர்பாக, யாரும் பேசாத நிலையில், நான் எப்படி வலிமை படத்தில் நடிக்க முடியும். அஜித்துடன் இணைந்து நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி தான்‘‘ என தெரிவித்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *