BREAKING NEWS

டிசம்பர் 6 டி20 ஆட்டம் மும்பையில் இருந்து ஹைதராபாத்துக்கு மாற்றம்

இந்தியாவில் மேற்இந்தியதீவுகள் அணி சுற்றுப்பயணம் செய்து தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20, ஒரு நாள் தொடா்களில் பங்கேற்கிறது. இந்தத் தொடர்களுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 சர்வதேச ஆட்டம், டிசம்பர் 6 அன்று மும்பையில் நடைபெறும்படி அட்டவணையைத் தயாரித்திருந்தது பிசிசிஐ.

ஆனால், 1992 டிசம்பர் 6 அன்று உத்தரப் பிரதேசத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதால் அன்றைய தினம் பாபர் மசூதி இடிப்பு நினைவு தினமாக ஒவ்வொரு வருடமும் அனுசரிக்கப்படுகிறது. டிசம்பர் 6 அன்று, இந்தியா முழுக்க எவ்வித அசம்பாதவிதச் சம்பவங்களும் நேராமல் தடுப்பதற்கும், அமைதியை உறுதிசெய்யவும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து மாநில அரசுகளும் மேற்கொள்கின்றன.

இந்நிலையில் இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 ஆட்டம் டிசம்பர் 6 அன்று மும்பையில் நடைபெற்றால் அதற்கு உரிய பாதுகாப்பு வழங்க இயலாது என மும்பைக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து மூன்றாவது டி20 நடைபெறுவதாக இருந்த ஹைதராபாத்துக்கு முதல் டி20 ஆட்டத்தையும் மும்பைக்கு மூன்றாவது டி20 ஆட்டத்தையும் ஒதுக்கியுள்ளது பிசிசிஐ.இந்தப் புதிய மாற்றத்தின்படி, இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 ஆட்டம் டிசம்பர் 6 அன்று ஹைதராபாத்திலும் டிசம்பர் 11 அன்று மும்பையில் 3வது டி20 ஆட்டமும் நடைபெறவுள்ளன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *