BREAKING NEWS

தமிழகத்தில் மின்னணு ஆட்டோக்களின் சேவையை முதல்வர் தொடங்கி வைத்தார்

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில், தமிழகத்தில் மின்னணு ஆட்டோக்களின் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். மின்னணு ஆட்டோக்கள்இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சரின் தலைமையில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் குழுவினர் அரசு முறைப் பயணம் மேற்கொண்டு 8,835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து, 35,520-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டனர்.துபாயில், இந்தியத் துணைத் தூதரகம் மற்றும் தொழில் தலைவர்கள் கூட்டமைப்பு ஆகியோருடன் இணைந்து நடத்தப்பட்ட முதலீட்டாளர் சந்திப்பில், பெட்ரோல் ஆட்டோக்களை சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார ஆட்டோக்களாக மாற்றி இயக்கும் திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், துபாய் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சேவை தொடக்கம்இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்தும் விதமாக, துபாய் நிறுவனத்தால் பெட்ரோல் ஆட்டோக்களை சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோக்களாக மாற்றியமைக்கப்பட்டு, முதற்கட்டமாக சென்னையில் 100 மின்னணு ஆட்டோக்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கும் அடையாளமாக, முதலமைச்சர் நேற்று தலைமை செயலகத்தில் 4 மின்னணு ஆட்டோக்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *