BREAKING NEWS

பெண்களின் பாலியல் தொல்லைக்கு காரணம் செல்போன்கள் தான் –- பாக்யராஜ் காரசாரம்

ஆர்.பி.எம்சினிமாஸ் என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள படம் ” கருத்துக்களை பதிவு செய் ”
இந்த படத்தில் எஸ்.எஸ்.ஆர்.ஆர்யன் நாயகனாக நடிக்க . நாயகியாக உபாசனா வும் மற்றும் சௌடா மணி, இ.வி.கணேஷ்பாபு, சிந்துஜாவிஜி, நேத்ரா ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் கலந்து கொண்டு இசை தட்டை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பெண்கள் அதிகமாக செல்போன்களை உபயோகம் செய்வதால் தான் இப்போது பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. ஒரு காலத்தில் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் இருந்தவரை இதுபோன்ற தவறுகள் நடந்தது இல்லை. ஆனால் தற்போது எங்கு பார்த்தாலும் பெண்கள் மொபைல் போன்களில் மணிக்கணக்காக பேசிக் கொண்டிருப்பதாலும், எல்லைகள் மீறுவதால் இது போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
ஆண்கள் சின்னவீடு வைத்துக் கொண்டால் அது பணம் காசுடன் முடிந்துவிடும் என்றும், தற்போது வரும் செய்திகள் கள்ளக் காதலுக்காக கணவனை கொன்ற கொடூரம், குழந்தையைக் கொல்வது என பெண்கள் அனைத்துக்கும் துணிந்து விட்டனர்
இவ்வாறு பாக்யராஜ் கூறினார்.
படம் பற்றி இயக்குனர் ராகுல்பரமகம்சா கூறுகையில், இன்றய சமூக இளைஞர்கள், பெண்கள் சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துகிறார்கள் அதனால் நிறைய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பொள்ளாச்சி சம்பவம் ஒன்றுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முகநூல் பயன்படுத்தும் அனைத்து பெண்களுக்கும் இந்த படம் ஒரு விழிப்புணர்வைத்தரும் ‘‘என்றார். மற்றும் கதாநாயகன் ஆர்யன், நாயகி உபாசனா ,இசை அமைப்பாளர் கணேஷ் ராகவேந்திரா,ஒளிப்பதிவாளர் மனோகரன்,பாடல் ஆசிரியர் சொற்கோ, பட அதிபர் ராஜன், நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோரும் பேசினார்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *