BREAKING NEWS

ஆர்யா -சாயிஷா நடிக்கும்

‘டெடி’ படத்தில் மாசூம் சங்கர்

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் படம் ‘டெடி’ .
இப்படத்தில் ஆர்யா நாயகனாகவும் சாயிஷா நாயகியாகவும் நடிக்கிறார்கள்.திருமணத்துக்கு பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கும் படம் இது.
நாணயம், மிருதன், நாய்கள் ஜாக்கிரதை, டிக் டிக் டிக் ஆகிய படங்களை இயக்கிய சக்தி சவுந்தரராஜண் இப்படத்தை இயக்க ஒளிப்பதிவாளராக யுவாவும்,. ஸ்டண்ட் மாஸ்டராக சக்தி சரவணனும் எடிட்டராக சிவநந்தீஸ்வரனும் பணியாற்ற டி இமான் இசை அமைக்கிறார்.
படத்தில் முக்கிய வேடத்தில் தடையறத் தாக்க, மீகாமன் தடம் ஆகிய படங்களின் இயக்குநர் மகிழ்திருமேனி நடிக்க மற்றும் சாக்ஷி அகர்வால் கருணாகரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தில் 90எம் எல் படம் மூலமாக இளைஞர்களின் இதயம் கவர்ந்த மாசூம் சங்கர் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இப்படம் குறித்து அவர் கூறும்போது,
“இப்படத்தில் நடிப்பதை பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். ஆர்யா மிகச்சிறந்த நடிகர். அவருடன் இணைந்து நடிக்கும் போது நிறைய விசயங்களை கற்றுக்கொள்ள முடிந்தது. மேலும் இயக்குநர் சக்தி சவுந்தரராஜன் படமென்றால் அப்படத்தில் பெரிய மேஜிக் இருக்கும். தமிழ்சினிமாவில் மிகப்பெரிய முயற்சி அவரது டிக் டிக் டிக் படம்.. 90 எம் எல் படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் வந்தது.. இப்படம் என் கரியரில் ஒரு நல்ல பதிவாக இருக்கும் ” என்றார்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *