BREAKING NEWS

கால்நடை பராமரிப்புத்துறை கிளை நிலையம்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம், நாகதேவம்பாளையத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கால்நடை கிளை நிலையத்தினை பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்துவைத்தார்.இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு பள்ளிக்கல்வி இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது,தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் பல்வேறு மக்கள் நல திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறார்கள்.

மேலும் இப்பகுதியில் விவசாயிகளின் நலன் கருதி கால்நடைகளுக்கு மருத்துவ வசதி ஏற்படுத்திடும் வகையில் கால்நடை கிளை நிலையத்தினை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கால்நடைகளின் இழப்புகளை தடுக்க முடியும். அவற்றை தரம் உயர்த்தி 24 மணி நேரமும் இயங்கும் கால்நடை மருத்துமனையாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கால்நடை மையத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதோடு அங்குள்ள ஸ்கேன் மூலமாக என்னென்ன நோய்கள் தாக்கி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியும்.

மேலும் இங்கு கால்நடைகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. காங்கேயம் இன பசுக்கள் மற்றும் காளைகள் அழிந்து விடாமல் பாதுகாக்கும் பொருட்டு பவானிசாகர் பகுதியில் கால்நடை மருத்துவ ஆராய்ச்சிநிலையம் அமைக்கப்பட்டு, இந்த கால்நடை ஆராய்ச்சி நிலையமானது சுமார் 57 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்மூலம் காங்கேய இன கால்நடைகள் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் நான்கு வெள்ளாடுகள் வழங்கும் திட்டம், கோழிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இங்குள்ள கால்நடை வளர்ப்போர் இக்கிளை நிலையத்தினை பயன்படுத்தி தங்கள் கால்நடைகளை நன்கு பராமரித்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் என பேசினார்.

முன்னதாக பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம், நாகதேவம்பாளையத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் புதியதாக திறந்து வைக்கப்பட்ட கால்நடை கிளை நிலையத்திற்கான புதிய கட்டிடம் அமைக்கும் பணிக்கு பூமிபூஜையிட்டு, பணிகளை தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவர் கே.கே.காளியப்பன், கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராமன, உதவி இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) மரு.விஷ்ணுகந்தன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *