BREAKING NEWS

திருமணம் ஆகாமலேயே கர்ப்பம் ஆன அஜித் பட நடிகை

நடிகர் அஜித்தின் ‘‘நேர்கொண்ட பார்வை‘ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர் இந்தி நடிகை கல்கி கொச்லின். அவர், தற்போது கர்ப்பமாக உள்ளார். அவர் கை ஹர்ஷ்பெர்க் என்பவரை காதலித்து வருகிறார். இதற்கிடையில் நடிகை கல்கி இப்போது கர்ப்பமாக இருக்கிறார்.
தான் கர்ப்பமாகி இருக்கும் விஷயத்தை அவர் சமூக வலைதளம் மூலம் வெளியே சொல்லி இருக்கிறார். திருமணம் ஆகாமலேயே, அவர், தான் கர்ப்பமாகி இருப்பதை வெளியே சொல்ல, அதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இப்படி விமர்சனம் கிளம்பியது, அது குறித்து கல்கி விளக்கம் அளித்திருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
திருமணம் ஆகாமலேயே கர்ப்பம். இதை எப்படி வெளியே தெரியப்படுத்துவது என்பது குறித்து, வெகு நாட்கள் பதற்றமாகவே இருந்தது. இதை வெளிப்படையாக தெரிவித்தால், எப்படியும் எதிர்ப்பு வரும் என்பது எனக்குத் தெரியும். அதுவும் நடிகை என்றாலே, பலரும் இது குறித்து தங்களுடைய ஆவேசத்தை வெளிப்படுத்துவர் என்றும் எதிர்பார்த்தேன். அது தான் நடக்கிறது. நடிகை என்றால், இப்படிப்பட்ட சங்கடங்களையும் எதிர் கொண்டுதான் ஆக வேண்டும். பத்து ஆண்டுகளாக, இப்படிப்பட்ட விமர்சனங்கள் என்னை நோக்கி வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும், எனக்கு ஆதரவாகவும் பலர் உள்ளனர். அக்கம் பக்கத்தவர் எனக்கு ஆறுதலாக இருப்பது குறித்து மகிழ்ச்சி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *