BREAKING NEWS

எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்தை மோசடியாக பயன்படுத்தி அஜித்பவார் பதவியேற்றுள்ளார்

எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்தை மோசடியாக பயன்படுத்தி அஜித்பவார் பதவியேற்றுள்ளார் என தேசியவாத காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.மராட்டியத்தில் திடீர் என பாஜக தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் ஆதரவுடன் ஆட்சி அமைத்து உள்ளது. இந்த அரசியல் மாற்றம் தேசிய அளவில் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

சிவசேனா தலைமையில் ஆட்சியமையும் என்று சரத்பவார் கூறிய நிலையில், இந்த திடீர் அரசியல் திருப்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சரத்பவாரின் அண்ணன் மகனான அஜித்பவார், தேசியவாத காங்கிரஸின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஆதரவுக்கடிதம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வருகைப் பதிவுக்காக எம்.எல்.ஏ.க்களிடம் பெறப்பட்ட கையெழுத்தை, மோசடியாக பயன்படுத்தி, அஜித்பவார் பதவியேற்றுள்ளார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் குற்றம்சாட்டி உள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *