BREAKING NEWS

94.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்:

94.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்:

மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி.
சென்னை, மே 23-

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 94.ச சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டைபோலவே இந்த ஆண்டும் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

பொதுத் தேர்வு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ந் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வில் 12 ஆயிரத்து 336 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 10 லட்சத்து 1 ஆயிரத்து 140 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் பள்ளி மாணவர்கள் 9 லட்சத்து 50 ஆயிரத்து 397. மாணவியரின் எண்ணிக்கை 4 லட்சத்து 76 ஆயிரத்து 57 பேர். மாணவர்கள் 4 லட்சத்து 74 ஆயிரத்து 340 பேர்.

இவர்களுக்கான தேர்வுகள் முடிவடைந்த உடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியினை தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 16-ந் தேதி வெளியிடப்பட்டுது. அவ்வாறு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 23-ந் தேதி வெளியிடப்படும் என தெரிவித்திருந்தார். இதன் படி தேர்வு முடிவுகள் நேற்று காலை 9.30 மணியளவில் இணையத்தளம் மூலம் வெளியிடப்பட்டது.

முடிவுகள்

மேலும் மாணவர்கள் www.tnr-esults.nic.in , www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில், தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்துக்கொண்டனர். மேலும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகளை அறிந்துக்கொணடனர். மேலும் மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி மூலமும் தேர்வு முடிவு அனுப்பப்பட்டது.

தேர்ச்சி விகிதம்

இந்த ஆண்டு பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களாகவும் பதிவு செய்தோரின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 1 ஆயிரத்து 140. இதில் ஒட்டு மொத்தத்தில் 94.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.4 சதவீதமும், மாணவர்கள் 92.5 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் வழக்கம் போல் மாணவர்களைவிட மாணவிகளே 3.9 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாற்று திறனாளி மாணவர்கள்

மாற்றுத்திறனாளி மாணவர்கள் 4 ஆயிரத்து 433 பேர் தேர்வு எழுதினார்கள் அதில் 3 ஆயிரத்து 944 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 186 சிறைக்கைதிகள் தேர்வு எழுதினார்கள் அவர்களில் 76 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

100 சதவீதம் தேர்ச்சி

5 ஆயிரத்து 584 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 5 ஆயிரத்து 456 அரசுப் பள்ளிகளில் 1 ஆயிரத்து 687 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. மொத்த மாணவர்களில் 401 மதிப்பெண்களுக்கு மேல் 1 லட்சத்து 27 ஆயிரத்து 846 பேர் மாணவிகளும், 78 ஆயிரத்து 950 மாணவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 6 ஆயிரத்து 796 மாணவர்கள் பொற்றுள்ளனர்.




Leave a Reply