BREAKING NEWS

80களின் நட்சத்திர சந்திப்பு

80களில் திரையுலகில் ஒன்றாகச் சேர்ந்து நடித்தவர்கள் ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் ஒன்றாக சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இந்தாண்டிற்கான நட்சத்திர சந்திப்பு ஐதராபாத்தில் உள்ள நடிகர் சிரஞ்சீவியின் வீட்டில் நடந்தது. இதில் நடிகர்கள் ரகுமான், நாகார்ஜுனா, மோகன்லால், வெங்கடேஷ், சரத்குமார், பாக்யராஜ், பிரபு, சிரஞ்சீவி, ஜெயராம், சுமன், சுரேஷ், ஜெகபதி பாபு, ரமேஷ் அரவிந்த், பானுசந்தர், நடிகைகள் குஷ்பு, ராதிகா, சுஹாசினி, ஜெயசுதா, ஷோபனா, சுமலதா, நதியா, ராதா, அமலா, சரிதா, லிசி, பூர்ணிமா, ஜெயபிரதா, ரேவதி, மேனகா, அம்பிகா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆனால் இதில் கலந்து கொள்ள இந்தாண்டு 80களில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இது தொடர்பாக தனது வருத்தத்தை அவர் சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அந்தப் பதிவில் அவர், ’80களின் நடிகர்களில் நான் மோசமான நடிகராகவும், இயக்குனராகவும் இருந்திருக்கலாம். அதனால் அவர்கள் என்னை அழைக்கவில்லை என நினைக்கிறேன். இது எனக்கு வருத்தம் தான்’, என பிரதாப் போத்தன் குறிப்பிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *