BREAKING NEWS

7 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் நிதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது உயிரிழந்த

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 7 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் நிதி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மீனவர்கள் மரணம்

நாகை, செருதூரைச் சேர்ந்த செல்வமணி கடலில் மீன் பிடி பணியில் ஈடுபட்டிருந்த போது, கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும், நாகை, வடக்குப்பொய்கைநல்லூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் மீன் பிடி பணியில் ஈடுபட்டிருந்த போது, கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும், ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் பாம்பன் மீன்பிடி தளத்திலிருந்து நாட்டுப்படகில் மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்த சிந்தாஸ் மற்றும் மினோன் ஆகிய இரு மீனவர்களின் உடல்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தியையும் அறிந்தேன்.

1 லட்சம் நிதி

கன்னியாகுமரி, கொல்லங்கோட்டைச் சேர்ந்த சகாயம், லூர்துராஜ் ஆகிய இரண்டு மீனவர்கள் மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்த போது, படகு விபத்துக்குள்ளானதில் இரு மீனவர்களின் உடல்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தியையும், கன்னியாகுமரி, ஏழுதேசத்தைச் சேர்ந்த அருளிஸ் மீன் பிடி பணி முடிந்து கரை திரும்பும் போது, படகு விபத்துக்குள்ளானதில், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்த போது, படகு கவிழ்ந்து உயிரிழந்த 7 நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவிக்கிறேன். மேற்கண்ட சம்பவங்களில் உயிரிழந்த 7 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *