BREAKING NEWS

61 பந்துகளில் 148 ரன்கள்: ஆஸ்திரேலிய வீராங்கனை சாதனை

மகளிர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா புதிய சாதனை படைத்தார்.

ஆஸ்திரேலியா – இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 2 விக்கெட்டுக்கு 226 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனை அலிசா ஹீலி 61 பந்துகளில் 148 ரன்கள் அடித்து சாதனை படைத்தார்.

மகளிர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு வீராங்கனையின் தனிநபர் அதிகபட்சம் இது. 29 வயதான அலிசா, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் ஸ்டார்க்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் ஆடிய இலங்கை அணி 94 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 30 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *