BREAKING NEWS

606 அடுக்குமாடி வாடகை குடியிருப்புகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

சென்னை, அண்ணா நகர் மேற்கு விரிவாக்கத்தில் 200 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு ஊழியர்களுக்கான 606 அடுக்குமாடி வாடகைக் குடியிருப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

வாடகை குடியிருப்புகள்

தமிழ்நாடு அரசு, மாநிலம் முழுவதும், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர், குறைந்த வருவாய்ப் பிரிவு, மத்திய வருவாய்ப் பிரிவு மற்றும் உயர் வருவாய்ப் பிரிவு ஆகிய அனைத்துத் தரப்பு மக்களுக்கும் முறையான திட்டமிட்ட மனைமேம்பாட்டு திட்டங்கள், வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கொண்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், பழுதடைந்த தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்புகளை இடித்து விட்டு, அதே இடங்களில் அதிக அரசு ஊழியர்கள் வீட்டுவசதி பெறும் வகையில், அதிக எண்ணிக்கையில் தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்புகளை கட்டி வருகிறது.

காணொலி காட்சி

சென்னை, அண்ணா நகர் மேற்கு விரிவாக்கத்தில் ஏற்கெனவே இருந்த அரசு ஊழியர்களுக்கான 126 அடுக்குமாடி வாடகைக் குடியிருப்புகள் பழுதடைந்த காரணத்தினால், அக்குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்புகள் திட்டத்தின் கீழ், 200 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அந்த இடத்தில் அரசு ஊழியர்களுக்காக கட்டப்பட்டுள்ள 606 அடுக்குமாடி வாடகைக் குடியிருப்புகளை சென்னை கோட்டையில் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.




Leave a Reply