தற்போதைய செய்திகள்

56 அங்குல மார்புள்ள மோடியிடம் ஏதேனும் திட்டம் இருக்கும் ராகுல் காந்தி டுவிட் பதிவு….

புதுடெல்லி,
சீனாவுடனான டோக்லாம் எல்லைப் பிரச்சினையில் தீர்வு காண 56 அங்குல மார்பு கொண்ட மோடியிடம் ஏதேனும் திட்டம் இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நிலைப்பாடு
சீன அரசு நேற்று முன்தினம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், டோக்லாம் எல்லைப்பகுதி எங்களுக்கு சொந்தம். இனிமேலாவது டோக்லாம் எல்லை விவகாரத்தில் இந்தியா பாடம் கற்க வேண்டும். எல்லைப் பகுதி மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கு இந்தியாவின் தூதர் கவுதம் பாம்பாவாலே அளித்த பதிலடியில், டோக்லாம் எல்லை விவகாரத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்த முயன்றால் இந்தியா அடுத்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டியது இருக்கும் என எச்சரித்து இருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
நல்ல திட்டம்
டுவிட்டரில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:
டோக்லாம் விவகாரத்தில் இருந்து இந்தியா பாடம் கற்க வேண்டும் என சீனா கூறி எல்லைப் பிரச்சினையை எழுப்பி இருக்கிறது.
கடந்த வாரம் என்னுடைய டுவிட்டரில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். டோக்லாம் விவகாரத்தை பிரதமர் மோடி எப்படி சமாளிப்பார் என்பதற்கு அதில் 63 சதவீதம் பேர், கட்டிப்பிடி யுத்தியை பயன்படுத்துவார் என்றும், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனை குறைகூறுவார் என்றும், டோக்லாம் விஷயத்தை சமாளிக்க தெரியாமல் பொதுப்படையாக அழுவது சமாளிப்பார் என்றும் கூறியிருக்கிறார்கள்.
ஆனால், நீங்கள் சொல்வது தவறு, இந்தியாவின் நலனுக்காக, 56 அங்குல மார்பு கொண்ட வலிமையான மனிதரிடம் ஏதேனும் நல்ல திட்டம் இருக்கும்
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Leave a Reply