தற்போதைய செய்திகள்

5 முறை 500 ரன்னைத் தாண்டி கோலி சாதனை

5 முறை 500 ரன்னைத் தாண்டி கோலி சாதனை

ஐ.பி.எல் தொடரில்
மும்பை, மே 15-

ஐ.பி.எல் தொடரில் 5 முறை 500 ரன்களை தாண்டிய முதல் வீரர் என்ற சாதனையை ஆர்.சி.பி கேப்டன் விராட் கோலி படைத்துள்ளார்.

விராட்கோலி

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணி நேற்று முன்தினம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் 88 ரன்னில் சுருண்டது.

பின்னர் 89 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 8.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சாதனை

தொடக்க வீரராக களம் இறங்கிய விராட் கோலி 28 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 48 ரன்கள் சேர்த்தார். இந்த சீசனில் 12 போட்டியில் பங்கேற்று 514 ரன்கள் குவித்துள்ளார்.

இதன்மூலம் 11 சீசனில் 5 முறை 500 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2011 சீசனில் 557 ரன்களும், 2013-ல் 634 ரன்களும், 2015-ல் 505 ரன்களும், 2016-ல் 973 ரன்களும் அடித்துள்ளார்.

வார்னர் 4 முறை 500 ரன்களை கடந்து 2-வது இடத்திலும், கிறிஸ் கெய்ல், காம்பீர், ரெய்னா 3 முறை 500 ரன்களை கடந்து 3-வது இடத்திலும் உள்ளனர்.
Leave a Reply