BREAKING NEWS

45 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புதிய சலுகை.

45 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புதிய சலுகை

புதுடெல்லி,மே 23-

பி.எஸ்.என்.எல். நிறுவன போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சலுகை

பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு டேட்டா சுனாமி சலுகை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.499 விலையில் கிடைக்கும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு மாதம் 45 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.509 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா என மொத்தம் 60 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மார்ச் மாத வாக்கில் ஏர்டெல் நிறுவனம் ரூ.499 விலையில் போஸ்ட்பெயிட் சலுகையை அறிவித்தது. இந்த சலுகையில் மாதம் 40 ஜிபி டேட்டா, அனிலிமிட்டெட் வாய்ஸ் கால், ஒரு வருட அமேசான் பிரைம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

டேட்டா

வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்களும் 40 ஜிபி டேட்டா வழங்குகின்றன. பி.எஸ்.என்.எல் ரூ.499 போஸ்ட்பெயிட் சலுகையில் டேட்டா ரோல்ஓவர் வசதி வழங்கப்படவில்லை. டேட்டா ரோல்ஓவர் வசதி பயன்படுத்தாத டேட்டாவை அடுத்த மாதம் பயன்படுத்த முடியும்.

பி.எஸ்.என்.எல். தற்சமயம் அறிவித்துள்ள ரூ.499 சலுகையில் ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் வழங்குவதை விட அதிகளவு டேட்டா வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.499 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 60 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

டேட்டா சுனாமி

பி.எஸ்.என்.எல். அறிவித்திருக்கும் புதிய சலுகையில் வாய்ஸ் காலிங் வசதி மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. புதிய சலுகை எந்தெந்த வட்டாரங்களில் வழங்கப்படுகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. முன்னதாக டேட்டா சுனாமி என்ற பெயரில் பி.எஸ்.என்.எல் ரூ.98 விலையில் சலுகையை பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது. ரூ.98 விலையில் கிடைக்கும் இந்த சலுகையில் 26 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.




Leave a Reply