BREAKING NEWS

40 வயலின் இசையில் உருவான பாடல்

ஜோதிகா நடிப்பில் வெளியான படம் ‘ஜாக்பாட்’. இப்படத்தில் இசையமைப்பாளர்விஷால் சந்திரசேகரின் இசை பெரிதாக பேசப்பட்டது.. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் ‘சாணக்கியா‘‘ உஅல 3 படங்களுக்கும் தமிழில் வைபவ் நாயகனாக நடிக்கும்‘ ‘டாணா’ படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.
‘டாணா’ படத்தின் சிறப்பம்சம் இதில் நாயகனாக நடிக்கும் வைபவ்-விற்கு கோபம், சந்தோசம் என்று எந்த உணர்ச்சிஅதிகமானாலும் அவருடைய குரல் பெண்ணாக மாறிவிடும்.
அதற்கு தகுந்த படி இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர் வித்தியாசமான முறையில் இசையை கையாண்டுள்ளார். இது பற்றி அவர் கூறீயதாவது:-
‘டாணா‘‘ படத்துக்காக ‘நீ மயக்குற’ என்று தொடங்கும்
பாடலை ஹாரிஸ் ஸ்டுடியோவில் இசையமைத்தேன். சுமார் 40 வயலின் ஒரே நேரத்தில் வாசிக்க வைத்து பதிவு செய்தேன். இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டார்.
இப்படத்தின் பின்னணி இசையில் ஒரு புதுமையான விதத்தில் இசையமைத்திருக்கிறேன். அதாவது எந்தெந்த சம்பவத்தால் வைபவ் பாதிக்கப்படுவாரோ அப்பொழுதெல்லாம்வைபவிற்கு குரல் மாறி விடும், அப்படி ஒவ்வொரு முறை குரல் மாறும்போதும் அந்த இடத்தில் வித்தியாசமான இசை இருக்கும். மேலும், இப்படத்தில் நகைச்சுவை, த்ரில்லர், திகில், மர்மம், சிறு சிறு அரசியல் என்று அனைத்தும் காட்சிகளிலும் இசை முக்கிய இடம் பிடிக்கும்.
‘ஜாக்போட்’ படத்தைவிட இப்படத்தின் இசை பேசும்படி இருக்கும். ஏனென்றால், இப்படத்தின் இசைக்காக 15 நாட்கள் ஆனது.
இவ்வாறு விஷால் சந்திர சேகர் கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *