BREAKING NEWS

4 நாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய முடிவு

வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்ததையடுத்து, எகிப்து, ஈரான், துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.நாட்டின் முக்கிய உணவுப் பொருளாக இருப்பது வெங்காயம். சராசரியாக ஒரு கிலோவுக்கு ரூ.20லிருந்து 25 ஆக விற்கப்படும் வெங்காயம் திடீரென உச்சத்திற்கு சென்று மக்களை அச்சுறுத்துவது அவ்வப்போது நடந்து வருகிறது. அவ்வகையில் தற்போது வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

கடந்த மாதத்தில் வெங்காயம் 1 கிலோ ரூ.80 வரை உயர்ந்தது. கடந்த 2 நாட்களில் சில மாநிலங்களில் 1 கிலோ ரூ.90 வரை உயர்ந்துள்ளது.இந்தியாவிலேயே மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பகுதியில் தான் அதிக அளவில் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. நாசிக்கில் உள்ள லசல்கான் என்ற இடத்தில் மிகப்பெரிய வெங்காய சந்தை உள்ளது.விலை உயர்வுக்கு வடமாநிலங்களில் பெய்த கடும் மழை தான் காரணம் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். பல இடங்களில் தண்ணீர் தேங்கி வெங்காயம் அழுகிவிட்டது.

அறுவடை செய்த வெங்காயத்தையும் உரிய முறையில் சேமித்து வைக்க முடியவில்லை. இதனால் மார்க்கெட்டுக்கு வெங்காயம் வருவது குறைந்துவிட்டது.இந்நிலையில், வெங்காயம் விலையை கட்டுப்படுத்தும் வகையில், துருக்கி, ஈரான், எகிப்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக 80 முதல் 100 கண்டெய்னர்கள் வரை இறக்குமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.பருவம் மாறி மழை பெய்வதால் வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வியாபாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *