தற்போதைய செய்திகள்

4 இடங்களில் வெயில் சதம் அடித்தது

4 இடங்களில் வெயில் சதம் அடித்தது

சென்னை

திருத்தணி, வேலுார், மதுரை உள்ளிட்ட 4 இடங்களில் வெயில் சதம் அடித்தது.

கத்திரி வெயில் என்கிற அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந் தேதி தொடங்கி, நேற்று 11-வது நாளை எட்டியது. பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்தாலும், கோடை மழையால் வெப்பளவு சற்று குறைந்தது. நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி, 4 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. அதிகபட்சமாக, திருத்தணியில் வெயில் 104.36 டிகிரி பதிவாகியது. திருத்தணியில் 104.36 டிகிரி, வேலுாரில் 103.1 டிகிரி, மதுரை விமான நிலையத்தில் 100.4 டிகிரி, சேலத்தில் 100 டிகிரி, சென்னை விமான நிலையத்தில் 98.78 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கத்தில் 96.44 டிகிரி வெப்பநிலை பதிவாகியது.
Leave a Reply