BREAKING NEWS

37 ஆயிரம் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க தவிக்கும் ஐக்கிய நாடுகள் சபை

கடும் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 37 ஆயிரம் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க ஐ.நா. தவிக்கிறது.

இந்த ஆண்டில் ஐ.நா. அவை செயல்படுவதற்கு தேவையான நிதியில் சுமார் 10,000 கோடி ரூபாய் பற்றாக்குறை நிலவுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஐ.நா. அவைக்குத் தேவையான நிதியில் 90 விழுக்காட்டினை வழங்கும் அமெரிக்கா, பிரேசில் மற்றும் அர்ஜெண்டினா, மெக்சிகோ, ஈரான், இஸ்ரேல் மற்றும் வெனிசுலா ஆகிய 7 நாடுகள், உள்பட 60 உறுப்பு நாடுகளிடம் இருந்து இன்னும் சரிவர நிதி கிடைக்காததே இதற்குக் காரணமாகி உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், இதை சமாளிக்கும் பொருட்டு ஐ.நா. பொதுச் செயலாளரான அண்டோனியா குட்டெரஸ் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

மின் பயன்பாட்டைக் குறைக்கும் விதமாக நகரும் மின் படிக்கட்டுகள், தண்ணீரைக் குளிரூட்டும் எந்திரம் போன்றவை நிறுத்தப்பட்டன. தூதர்களுக்கான மதுக்குடிப்பகம் மாலை 5 மணியுடன் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அலுவல் ரீதியிலான பயணங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளை மறுஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 37 ஆயிரம் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பது மட்டுமே முக்கிய முன்னுரிமை என்று ஐ.நா. சபை கூறியுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *