BREAKING NEWS

36 ஆண்டுகளுக்கு பின் களமிறங்கிய  பெரு அணியை வீழ்த்திய டென்மார்க் .

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ‘சி’ பிரிவில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டென்மார்க் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெரு அணியை வீழ்த்தியது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் சி பிரிவில் இடம் பிடித்துள்ள டென்மார்க், பெரு அணிகளும் முதன்முறையாக உலகக்கோப்பையில் மோதின. பெரு அணி 36 ஆண்டுகளுக்கு பின் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் களமிறங்கியுள்ளது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் அதிக அளவில் மைதானத்துக்கு வந்திருந்தனர். டென்மார்க் கடந்த 3 உலகக்கோப்பைகளிலும் நாக்அவுட் சுற்றுவரை முன்னேறியது. டென்மார்க் அணியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சனும், பெருவில் அதன் கேப்டன் பாவ்லோ கியுரோவும் பக்கபலமாக உள்ளனர்.

டென்மார்க் வெற்றி

முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் எந்த கோலும் அடிக்காததால் ஆட்டம் 0-0 என சமனில் இருந்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 59-வது நிமிடம் டென்மார்க் அணியின் யூசுப் யுராரி கோல் அடித்தார். இதனால் டென்மார்க் அணி 1-0 என முன்னிலை பெற்றது. இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இறுதியில், டென்மார்க் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.




Leave a Reply