BREAKING NEWS

328 ஜவுளி பொருட்கள்  இறக்குமதி வரி இரட்டிப்பாக உயர்ந்தது.

 

உள்நாட்டு ஜவுளி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 328 ஜவுளி பொருட்களுக்கு இறக்குமதி வரியை 20 சதவீதம் வரை அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வரி அதிகரிப்பு

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நடப்பு ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் எலக்ட்ரானிக் பொருட்கள் உட்பட 43 வகையான பொருட்களுக்கு அடிப்படை வரி அதிகரிக்கப்பட்டது. இதுபோல் சீனாவில் இருந்து இறக்குமதியை தடுக்க பொருள் குவிப்பு வரி மற்றும் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், 328 ஜவுளி பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தியதாக, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மக்களவையில் கடந்த செவ்வாய் அன்று அறிவித்தார். சுங்கவரி சட்டம் 1962 பிரிவு 159ன் கீழ் இந்த வரி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் சூட், ஜாக்கெட், கார்பெட் உள்ளிட்ட 50 ஜவுளி பொருட்களுக்கு இறக்குமதி வரியை மத்திய அரசு இரட்டிப்பாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply